Journey Of Herdsmen
மாலை வேளை - வெயில் இறங்கும் நேரம்.. மேய கிளம்பினர் அவனும் அவன் மாடுகளும். கால் போன போக்கிலே போகாமல், தன் மாடு போன போக்கிலே நடந்தான் அவன். நன்கு பழகியதாலோ என்னவோ, செருப்பு போடாத அவன் கால்களை காட்டுமுட்கள் ஒன்றும் செய்யவில்லை. மேய்ச்சல்வெளியை அடைந்தனர் இருவரும், மாடுகள் நன்கு மேய ஆரம்பித்தன புல்வெளிகளில், இவனும் மரம் மரமாக மேய ஆரம்பித்தான் தன் உணவிற்கு, அவன் கண்ணில் பட்டது கொய்யா, சில நிமிடங்களில் அது அவனது வயிறை அடைந்திருந்தது. மாலை முடிந்து இருள் சூழும் நேரம், மாடுகளனைத்தும் உண்டு முடித்திருந்தன, மேகம் பிளந்து சோவென மழை பொழியத் தொடங்கியது. சிறு தூரலில் நனைந்துவிட்டு சிடுசிடுவென நடுங்கும் நகரத்தினர் மத்தியில், அடைமழையையும் அலட்சியம் செய்துவிட்டு நனைந்துகொண்டே வீட்டை அடைந்தனர் அவனும் அவன் மாடுகளும்... #JourneyOfHerdsmen பி.கு : படத்தில் பறப்பது Helicopter அல்ல, தட்டான் 😊